Breaking News

ஆக்கூரில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 



மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் பெருமாள் கோவில் தெருவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருள் தேர்வு அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. 

 தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் என்ற பெயரில் பல்வேறு நலப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக நான்காம் ஆண்டு நலப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது கடந்த நான்கு ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு பகுதிகளில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அழைத்து நடத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது இன்று ஆக்கூர் பெருமாள் கோவில் தெருவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இராம இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது நலப் பணி வழங்கும் விழாவில் மருத்துவர் எஸ் தினேஷ்குமார் கலந்துகொண்டு நோட்டு புத்தகம் எழுதுபொருள் தேர்வாட்டை ஆகியவற்றை வழங்கினார் சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்கேற்றனர் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலப்பணிகள் வழங்கப்படும் எனவும் விழாவில் தெரிவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் தலைவர் சிவகாமசுந்தரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் சீர்காழி திமுக இளைஞரணி செயலாளர் அஸ்வின் உடற்கல்வி ஆசிரியர் ஹரிஹரன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

No comments

Copying is disabled on this page!