Breaking News

கும்மிடிப்பூண்டி அருகே முந்திரி தோப்பில் பெண் அடித்து கொலை. மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின கூலி தொழிலாளி சீனு, இவரது மனைவி வெங்கடம்மாள் (36). இவர்களுக்கு 3ஆண் பிள்ளைகளும், 1 பெண் பிள்ளையும் உள்ளனர். நேற்று முன் தினம் வீட்டின் அருகே முந்திரி தோப்பில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வெங்கடம்மாள் சடலமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து பாதிரிவேடு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவன், மனைவி இருவரும் குடித்துவிட்டு அவ்வபோது தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், 7ஆம் தேதி இரவு இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மனைவியை உருட்டு கட்டையால் தாக்கியதில் வெங்கட்டம்மாள் உயிரிழந்த நிலையில் சடலத்தை அருகில் உள்ள முட்புதரில் வீசி விட்டு அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து சீனு தமது மனைவியை காணாமல் தேடியது தெரிய வந்தது. 

இதனையடுத்து மனைவியை அடித்து கொலை செய்து புதரில் வீசி நாடகமாடிய கணவன் சீனுவை கைது செய்த பாதிரிவேடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments

Copying is disabled on this page!