Breaking News

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் M.H. ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு.


 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த துளசேந்திரபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட கழக செயலாளர் சாதிக் பாட்ஷா இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் M.H. ஜவாஹிருல்லா கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்....


காவிரிப் படுகை டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சம்பா பயிருக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் வழங்கப்பட்டு அதில் நிறைய குறைகள் உள்ளதாக விவசாயிகள் முறையிட்டு உள்ளதாக தெரிவித்தார்.தனியார் நிறுவனங்களிடையே கொடுக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார் .



ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரியம் திருத்த மசோதா குறித்து நாடு முழுவதும் பாராளுமன்ற கூட்டுக்குழு பயணம் செய்து கருத்துகளை கேட்டு வருகிறது இதனிடையே வருகிற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது நடைமுறைக்கு முரணாக உள்ளது என தெரிவித்தார். தீய நோக்கத்தோடு இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி முழு வீச்சில் எதிர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.


உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது இது சரியான ஒரு முன்னெடுப்பாக நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார். மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிராக தொடக்கம் முதல் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். மது ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதை பாஜகவினர் விமர்சனம் செய்வதை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். வலிமையான தமிழ்நாடு உருவாக வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கு தான் வழிவகுக்கும் அரசு இது குறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் தற்போது என்கவுண்டர் என்கின்ற மோதல் சாவுகளை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். எவ்வளவு பெரிய குற்ற வழக்கில் ஈடுபட்டு இருந்தாலும் அவரை நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தி அவருக்கு எதிரான சாட்சிகளை நிரூபித்து உச்சபட்ச தண்டனையை வாங்கிக் கொடுப்பது என்பது கடமை. ஆனால் என்கவுண்டர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்களை ஆயுதம் வைத்திருந்தார்கள் காவலர்களை தாக்கினர் என தற்காப்புக்காக சுட்டார்கள் என சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். காவல்துறை கைது செய்து பிடியில் இருப்பவர்கள் கையில் ஆயுதம் எப்படி வந்தது அதை வைத்து அவர்கள் காவலரை தாக்கியதாக கூறுவது நம்பும் படியாக இல்லை என தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு துறையில் முன்னோடியாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் போலி என்கவுண்டர்கள் ஏற்கத்தக்க அல்ல இதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைபாடுஎன தெரிவித்தார். 



தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டமாக இருந்தாலும் எதுவும் நடக்கக்கூடாது என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!