Breaking News

குளித்தலை நகராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள்  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர், எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையை உயர்த்தி பொதுமக்களை  வஞ்சித்து வரும் விடியா திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சிகளிலும், 3 நகராட்சிகளிலும், 8 பேரூராட்சிகளிலும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தலைமையில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டமானது  நடைபெற்றது.

இதில் கரூர், புகலூர் ,ஆகிய பகுதிகளில் நடைபெற்றது அதனை அடுத்து  குளித்தலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார். இதில் அ.இ.அ.தி.மு.க வின் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்,  பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

No comments

Copying is disabled on this page!