பொன்னேரியில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு கண்டித்து மனித சங்கிலி போராட்டம். 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மாநிலம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சிருணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்த மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு விலைவாசி உயர்வு, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்ற பல்வேறு வரிகளை உயர்த்தியதை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு வழி வகுத்ததை கண்டித்தும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
No comments