உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தை புறவழிச் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது இருக்கின்ற பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை விரிவு படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் பெரி. செந்தில் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் பாண்டூர், அரளி, செம்மனங்கூர், உளுந்தண்டார் கோவில், கீரனூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மனித சங்கலில் ஈடுபட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர் மேலும் புதிய பேருந்து நிலையம் மாற்று இடத்திற்கு சென்றால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக மனித சங்கிலி போராட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.
No comments