பொறையாரில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும் மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் கழக புரட்சி தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி கண்டன உரையாற்றினார் இதில் தரங்கம்பாடி பேரூராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி அதிமுக செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மனித சங்கிலி போராட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
No comments