Breaking News

வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் நடைப்பெற்ற மூலிகை கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்..

 


உலக ஆயுர்வேத தினத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி ஆயுர்வேத மருத்துவ இயக்குநரகம் சார்பில், வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் மூலிகை, நவகிரகங்களின் நவதான்ய பயன்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார்.

 தொடர்ந்து குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சொர்ணபிரசன்னா சொட்டு மருந்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பிறந்த குழைந்தைகளை ஆயுர்வேத முறைப்படி பராமரிப்பது சம்பந்தமான புத்தகம், 27 நட்சித்திர மூலிகை மற்றும் அதன் பயன்பாடு, சிறுதான்ய பயன்பாடு நோய் தீர்க்கும் முறை, ஒற்றை மூலிகைகள் கொண்டு நோய் தீர்க்கும் முறை உள்ளிட்ட அட்டவணையை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆயுர்வேத நோடல் அதிகாரி டாக்டர் பத்மாவதம்மா, இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இந்திரா, ஆயுஷ் மருத்துவமனை மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி டாக்டர் பிரசன்ன லட்சுமி, ஆயுர்வேத மருத்துவர் ‌உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!