தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது நிலையில் தற்போது தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செம்பனார்கோவில், பொறையார், திருக்கடையூர், திருவிளையாட்டம், சங்கரன்பந்தல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த மழை நீடித்தால் சம்பா நடவு பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
No comments