கனமழை எச்சரிக்கை கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் தெற்கு காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்குமார் வேண்டுகோள்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் புதுச்சேரி அரசு துறைகளின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி தெற்கு போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது; புதுச்சேரி தெற்கு பகுதி போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் சார்பில், கனமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்து உயிர் மற்றும் பொருள் சேதத்தை தவிர்த்திட வேண்டும். மேலும், கடற்கரைக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரும் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். சட்டம் ஒழுங்கு காவல்துறை கண்காணிப்பாளர் பக்தவச்சலம் உடனிருந்தார். தொடர்ந்து, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசக்தியா உடன் இருந்தார் மட்டும் பத்துக்கு மேற்பட்ட காவலர்கள் மூ.புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் எச்சரிக்கை பலகை அமைத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேறும் படி ஒலிபெருக்கி மூலம் அறிவுருத்தினர்.
No comments