தூய்மைப்பணியாளர்களுக்கு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, திமுக வட்டச் செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சந்திரபோஸ், பொன்னப்பன், கண்ணன், ஜான் சீனிவாசன், கந்தசாமி, ரெக்ஸ்லின், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார். வட்ட பிரதிநிதி துரை மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட நிருபர்
No comments