புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சென்னை கோவை திருச்சி மதுரை போன்ற நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி வருகின்றனர்.புதுச்சேரி கடற்கரை சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது.
நாள் முழுவதும் பரபரப்பாக இயந்திர கதியில் இயங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள், பரபரப்பில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட்டு மகிழ்வாக வார விடுமுறையை கொண்டாடும் நோக்கில், புதுச்சேரி கடற்கரை சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி இசைக்கு தகுந்தவாறு உற்சாகமாக நடனமாடினார். இந்த நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்தும், ரசித்தும் நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.
நூற்றுக்கு மேற்பட்டோர் கடற்கரை சாலையில் குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments