அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ்: தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் எச்எம்எஸ் சங்கம் கோரிக்கை.
அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என எச்.எம்.எஸ். சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமையில், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் சாதிக், ஒருங்கிணைப்பாளர் நிர்மல், பொருளாளர் பெசில் உள்ளிட்ட நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், நலவாரியங்களில் பதிவு செய்துள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனசாக ரூபாய் 7 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், நலவாரியங்களை முறையாக பராமரித்திட வேண்டும். நலவாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகையை பாலின வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
No comments