தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக நடைபெறும் குறைதீர்முகாமிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.
மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மாதங்களாக மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டலத்தில் இது 4ஆவது கூட்டம். இதுவரை இந்த மண்டலத்தில் 251 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 245 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மனுக்கள் ஆவணங்களில் குறையுள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர் முகாமிற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மாநகராட்சியில் புதிய தார் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், பிரதான சாலைகளை அகலப்படுத்துல், உயர்கோபுர மின்விளக்குகள், டவுண்டாக்களை சீரமைத்து மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள் அமைத்து மாநகராட்சியை அழகுப்படுத்தும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் புதிய வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் மகேந்திரன், சுகாதார நகர்நல அலுவலர் வினோத்ராஜா, ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, சரவணகுமார், ராமர், கனகராஜ், விஜயலட்சுமி பொன்னப்பன், கந்தசாமி, ஜான், வட்டச்செயலாளர் சுப்பையா, போல்பேட்டை திமுக பிரதிநிதி ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments