புதுச்சேரி மாநிலத்தில் சிபிஐ கிளை அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்..
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
அதிமுகவின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகளை திறந்த ஆளுநருக்கு வாழ்த்துக்கள் என்றும், ரேஷன் கடைகளை உடனடியாக திறப்பதில் சிரமம் உள்ளதால் அங்கன்வாடிகளை பயன்படுத்தி இலவச அரிசி சர்க்கரையை வழங்க வேண்டும் என கூறினார்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை அதிகாரி ரவிக்குமார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், புதுவை அரசு அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் சிபிஐ கிளை அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அட்டவணை இன மக்களுக்கு தாய் வழியில் சாதி சான்றிதழ் வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசு திட்டமிட்டு நம் மக்களை பழிவாங்க காலம் கடத்தி வருகிறது என குற்றம் சாட்டிய அன்பழகன்,ஒப்பந்த முறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்றார்.
No comments