புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால்,தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 15,16 தேதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதலே புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments