சீர்காழி மார்க்கோனி பவுண்டேஷன் சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் தருமபுரம் ஆதீனம் வழங்கி அருளாசி...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60 வது ஜென்ம நட்சத்திரம் திருநாளை முன்னிட்டு சீர்காழி மார்கோனி பவுன்டேஷன் சார்பில் அக்.24}ம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தருமபுரம் ஆதீனம் திருக்கரத்தால் தங்கமோதிரம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மார்கோனி பவுன்டேஷன் சார்பில் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தலா 1கிராம் தங்கமோதிரத்தினை தருமபுரம் ஆதீனம் 27}வது குருமகாசந்நிதானம் திருக்கரத்தால் குழந்தைகளுக்கு அணிவித்தார். மேலும் பிரசவித்த தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான பெட், பழங்கள் ஆகியவற்றை வழங்கி ஆசிர்வதித்தார். அப்போது சட்டைநாதர் கோயில் தேவஸ்தானம் சிராபு செந்தில், சீர்காழி குருஞானசம்பந்தர் மிஷன் எழில் மலர் மெட்ரிக் பள்ளி, குருஞானசம்பந்தர் மிஷன் மீனாட்சி உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயலாளர் இ. மார்கோனி, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஷ், ரமாமணி, கலைசெல்விமதிவாணன், முன்னாள் அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி, கோகுல்குமார், சத்தியராஜ்பாலு, ராஜசேகரன், திமுக நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், அம்பலவாணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கணிவண்ணன், சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண்ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments