Breaking News

ஜிப்மர், பிரஞ்சு துணை துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஜெர்மனி, போலந்து நாட்டில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

 


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் பிரஞ்சு துணை துாதரகத்திற்கு 9 மற்றும் 10ம் தேதி மர்ம நபர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். போலீசார் தீவிர சோதனைக்கு பின்பு வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.



இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்த இ-மெயில் முகவரி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர். மத்திய உள்துறையின் கீழ் இயங்கும், சைபர் ஒருங்கிணைப்பு கமிட்டியின் மூலம் இ-மெயில் வந்த முகவரி, ஐ.பி., முகவரியை கொண்டு விசாரித்தனர். அப்போது, டார்க் நெட் எனப்படும் முறையில் ஜெர்மனி, போலந்து நாட்டில் இருந்து இ-மெயில் வந்துள்ளதுபோல் அனுப்பி உள்ளனர். ஆனால் உண்மையான முகவரி தெரியவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!