Breaking News

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மணி கூண்டு திடலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அரிமா சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் லயன் சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது உளுந்தூர்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராஜப்பன் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக  அசோக்குமார் சோர்டியா அவர்களும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் நகர மன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மேலும் 72 நபர்களுக்கு காலை உணவு கொடுத்தனர் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்குவிக்கும் பயிற்சியும் எழுது பொருள்களும் கொடுக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ராமலிங்கம், உளுந்தூர்பேட்டை அரிமா சங்கம் செயலாளர்கள் ஆறுமுகம்,ரமேஷ், முன்னாள் அரிமா சங்கத் தலைவர் பாவனன், அரிமா சங்கர் கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன், மோகன், மோகன் நாயுடு, ரங்கநாதன், புதிய உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக தேச நலனுக்காக உறுதிமொழி எடுக்கப்பட்டு விட இனிதாக நிறைவு செய்யப்பட்டது. 

No comments

Copying is disabled on this page!