ஊசுடு தொகுதிக்குட்பட்ட ஊசுட்டேரி மதகு முதல் சேந்தநத்தம் ஆத்துவாய்க்கால் வரை செல்லும் வாய்க்காலை தூர் வாரும் பணியினை அமைச்சர் சரவணன் குமார் தொடங்கி வைத்தார்..
புதுச்சேரி மாநிலம், ஊசுடு தொகுதிக்குட்பட்ட ஊசுட்டேரி மதகு முதல் சேந்தநத்தம் ஆத்துவாய்க்கால் வரை செல்லும் குறுமுலை வாய்க்கால் தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி பொறையூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சருமான சாய் ஜெ சரவணன் குமார் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி தூர்வாருதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லூயி பிரகாசம், இளநிலை பொறியாளர் சதா பாரதி மற்றும் ஊசுடு தொகுதி பாஜக ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், தொகுதி தலைவர் அய்யனார் உட்பட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
No comments