நாட்றம்பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் திலகவதி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார் கலந்துகொண்டு பள்ளியில் பயின்று வரும் 11 ஆம் வகுப்பு 196 மாணவிகளுக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி பேரூராட்சி செயலாளர் உமாசங்கர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் விஜயகுமார், பேரூர் கழக பொருளாளர் கதிர்வேல், 1வது வார்டு கவுன்சிலர் அனிதா ஜெகதீஷ் குமார், 5வது வார்டு கவுன்சிலர் அமுதா இளங்கோ மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் என்.கே.ஆர். சூர்யாகுமார் துணைத்தலைவர் குமரன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயலட்சுமி பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments