தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வில்லியனூர் தொகுதிக்குட்பட் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.
புதுச்சேரி அரசு, குடிமைப் பொருள் வழங்கல் துறையின் மூலம் தீபாவளியை முன்னிட்டு வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொம்பாக்கம், ஒதியம்பட்டு மற்றும் உத்திரவாகினிப்பேட் நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரசி மற்றும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு இலவச அரிசி மற்றும் இலவச சர்க்கரையை பொதுமக்களுக்கு தொடங்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி கான்பெட் நியாயவிலைக் கடை நிர்வாக அதிகாரி இந்திரமோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments