ஜீவானந்தம் 90's குழு சார்பாக இலவச மருத்துவ முகாம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜீவானந்தம் 90's குழு சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் முன்னாள் மாணவர் சங்கத்தினர் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் ஜீவானந்தம் 90 நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் நாரா. கலைநாதன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) முன்னாள் பள்ளி ஆசிரியர்கள் ,முன்னாள் மாணவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் பாபுஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் bewell மருத்துவமனை கலந்துகொண்டு பொது மருத்துவமும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கண் சிகிச்சையும் அளித்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஜீவானந்தம் 90's குழுவினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
No comments