காரைக்காலில் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நல்வர் கைது இரண்டு பைக்குகள் பறிமுதல்
காரைக்கால் மாவட்டம் திரு.பட்டினம் பகுதிக்கு அம்புத்திடல் என்ற இடத்திலிருந்து கடந்த 10 ஆம் தேதி இரவு இரண்டு இரு சக்கர வாகனங்கள் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக திரு.பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் இரு வேறு வழக்குகள் பதிவு செய்து திரு.பட்டினம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதனிடையே திரு.பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரிய கிறிஸ்டின் பால் உத்தரவின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமான இரு சக்கர வாகனத்தை பரிசோதனை செய்த போது மேற்படி வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள வாகன எண் போலியான என்பது தெரிய வந்தது.
அந்த வாகனத்தின் சேஸ் நம்பர் மூலம் மேற்படி வாகனமானது திரு.பட்டினம் காவல் நிலைய சரகத்தில் திருடு போன வழக்கு சம்பந்தப்பட்ட வாகனம் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் மேற்படி வாகனத்தை ஓட்டி வந்த நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி காலனியை சேர்ந்த பரத்ராஜ் @ பரத் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர்களை விசாரித்ததில் இருவரும் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற வாகனத் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் இதேபோல் திரு.பட்டினம் பகுதியில் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள பைக்கை திருட்டில் ஈடுபட்ட தஞ்சாவூர் சூர்யா, நாகை மாவட்டம் வெளிபாளையம் பகுதியை சேர்ந்த நாவுக்கரசு (22) மற்றும் வேளாங்கண்ணியை சேர்ந்த தேவேந்திரன் @ தேவா(21)ஆகியோருடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
இதனை திரு.பட்டினம் சரக்கத்தில் மட்டும் ரூ.2.75 லட்சம் மதிப்பிலான இரண்டு பைக்குகளை மேற்படி ஐந்து பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட பரத்ராஜ்,சூர்யா, நாவுக்கரசு மற்றும் தேவேந்திரன் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த திரு.பட்டினம் காவல் நிலைய போலீசார் சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி தஞ்சாவூரை சேர்ந்த சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றன. மேலும் சூர்யா மீது தமிழகப் பகுதிகளில் சாராயம் கடத்தல் மற்றும் வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் திரு.பட்டினம் பகுதியில் திருடப்பட்ட இரண்டு பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருடப்பட்ட பைக்குகளை உடனடியாக மீட்ட இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டியன் பால் தலைமையிலான போலீசாரை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் பாராட்டினார்.
No comments