கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து அதிமுக பொதுச்செயலாளராக உயர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு.
அதிமுக பொதுச்செயலாளரும். முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி மேற்கு பகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெ பேரவை இணைச்செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், உதயகுமார், எம்.ஜி.ஆர்மன்ற துணைச்செயலாளர் முருகன், பகுதி துணைச்செயலாளர்கள் கோகிலா, கணேசன், மாவட்ட பிரதிநிதி ஜெபமணி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளரும், மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி வரவேற்றார்.
தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அவரை தொடர்ந்து ஜெயலலிதா வழிநடத்தினார். அவரது வழியில் 3ஆவது தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று கட்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் நாம் பணியாற்றுவதற்கு வசதியாக பூத்கமிட்டி முறையாக அமைக்க வேண்டும். கடந்த தேர்தலில் 10 சதவீதம் வாக்கு நமக்கு குறைந்துள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை அதிமுகவில் அதிகளவில் சேர்ப்பதற்கு அனைவருமே பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலைவிட சட்டமன்ற தேர்தல்தான் நமக்கு முக்கியம் என்பதை நினைவில் வைத்து கொண்டு உழைக்க வேண்டும். கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து தான் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார். இதே போல் கட்சியில் உழைக்கின்ற அனைவருக்கும் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
கூட்டத்தில், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் பேசுகையில், காங்கிரஸ் கட்சியலிருந்த எம்.ஜிஆர் அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுக கட்சியை உருவாக்கி 5 மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல்லில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சராகி 11 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றினார். டீ கடை வைத்திருந்த பன்னீர் செல்வத்திற்கு அங்கீகாரம் கொடுத்து முதலமைச்சராக்கினார் ஜெயலலிதா. ஆனால் அவர் அதிமுகவிற்கு பல துரோக செயல்களை செய்தது மட்டுமின்றி எம்.ஜி,ஆர் மாளிகையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் அதிமுகவை தோற்கடிக்க தெருத்தெருவாக பலாப்பழத்தை தூக்கி கொண்டு அலைந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா உங்களை போன்ற துரோகிகளை சும்மாவிடாது என்றார்.
கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அமைப்பு சாராஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பிரபு, மாவட்ட அணி நிர்வாகிகள் சுதாகர், பெருமாள், ராஜா, பிரபாகர், விக்னேஷ், நிலாசந்திரன், மாவட்ட அணி துணை நிர்வாகிகள் ஜோதிமணி, ஆண்ட்ரூமணி, முனியசாமி, சரவணபெருமாள், ஜான்சன் தேவராஜ், மெஜிலா, ராஜேஸ்வரி, அலெக்ஸ்ஜி, பகுதி செயலாளர்கள் சேவியர், ஜெய்கணேஷ், செண்பகச்செல்வன், சுடலைமணி, வட்டச்செயலாளர்கள் ஜனார்த்தன், சுப்பிரமணி, வெங்கடேஷ், மணி, கணேஷ், முருகன், மணிகண்டன், சொக்கலிங்கம், கொம்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார் நன்றி கூறினார்.
No comments