உளுந்தூர்பேட்டையில் வி.சி.க மாநாட்டிற்காக நடப்பட்ட இரும்பு கொடிகம்புகள் திருட்டு.
உளுந்தூர்பேட்டையில் இன்று விசிக சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர்மாநாடு மாலை நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்த மாநாட்டிற்காக கட்சித் தொண்டர்கள் பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன சுங்கச்சாவடி அருகே மாநாட்டு திடலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊன்றி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கொடி கம்பகளில் கொடியை அவிழ்த்து போட்டுவிட்டு 2 - லட்சம் மதிப்புள்ள கொடி கம்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து தகவல் அறியும் அந்த உளுந்தூர்பேட்டை போலீசார் திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர்.
No comments