Breaking News

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராணுவ அணிவகுப்பு போன்று பேரணியாக சென்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.


 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 99-ஆம் ஆண்டு விஜயதசமிவிழா, சத்ரபதி சிவாஜி 350 வது ஆண்டு முடி சூடிய தின விழா, அகல்யா பாய் ஹோல்கர் 300-வது ஆண்டு ஜெயந்தி விழா ஆகியவற்றை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் கொடி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜகோபாலபுரத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று உத்திரவடக்கு வீதியில் முடிவுற்றது. இதில் காக்கி பேண்ட் வெள்ளை சட்டை கருப்பு குல்லா அணிந்து ராணுவ வீரர்கள் போல் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாரதமாதா, மற்றும் நிறுவனர் கேசவர் மற்றும் தலைவர் மாதவர் ஆகியோரின் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து அணிவகுத்தனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தொழிலதிபர் சுதாகரன் தலைமை தாங்கினார். ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை நிறுவனர் கோமல் சேகர் முன்னிலை வகித்தார். ப்ராந்த கார்ய காரணி ஸதஸ்ய கணபதி சுப்ரமணியம் சிறப்புரை ஆற்றினார். இதில் பாஜக இந்து முன்னணி விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!