அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த கலையரங்கம் கட்டுவதற்கு பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெற்று கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அம்பலூர் கிராமத்தை சேர்ந்த அம்மு சிவாஜி பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரூ 30,000 நன்கொடை வழங்கினார்கள்.
மேலும் தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் பாபு ரூ 10,000 நன்கொடை இந்த நிகழ்ச்சியில் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஒன்றிய கவுன்சிலர் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நிதியுதவி வழங்கப்பட்டது. நிதி உதவிகள் வழங்கிய பெருமக்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றிகளை தெரிவித்தார்கள்.
No comments