Breaking News

கந்திலி வட்டார வேளாண்மை துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திருவிழா.


கந்திலி வட்டாரம் குரும்பேரி கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திருவிழா (கிசான் கோஸ்தி ) வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி தலைமையில் நடைபெற்றது.

கந்திலி ஒன்றிய கவுனிசிலர் குலோத்துங்கன் முன்னிலையில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டாங்களான தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், நெல் வரப்புகளில் பயறு சாகுபடி செய்தல், துவரை சாகுபடி பரப்பு விரிவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாளுர பயிர் சாகுபடி, மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல், ஆடா தோடா, நொச்சி வரப்புகளில் வளர்த்து இயற்கை பூச்சி விரட்டியாக பயன்படுத்துதல் போன்ற மானிய திட்டங்களை பற்றி வேளாண் அலுவலர் ஜெயசூதா பேசினார்.

வேளாண் உதவி பொறியாளர் மகேந்திரவர்மன் கலந்துகொண்டு பண்ணை இயந்திரங்களுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள், வாடகை இயந்திர விவரங்கள், சோலார் உலர்த்திகள், பம்புசெட்டுகள் மானியத்தில் பெறுதல் பற்றி தெரிவித்தார். 

No comments

Copying is disabled on this page!