Breaking News

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைத் தீர்வு முகாம்.


திருப்பத்தூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்வு நாள் முகாம் அக்டோபர்-2024ம் மாதத்திற்குரியது 18.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் மக்கள் குறைதீர்வு தீர்க்கும் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முகாம் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் (GDP HALL-ல்) அனைத்து துறை மாவட்ட அலுவலர்களுடன் விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்காணும் முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். அது சமயம் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். எனவே திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாளில் கலந்து கொள்ள வேளாண்மை துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது

முகாமிற்கு வரும் விவசாயிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கதர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!