Breaking News

போலீசாரைக் கண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த கொள்ளையர்கள்.


திருவள்ளூர் அருகே வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு கொள்ளையர்கள் வாகன சோதனையில் போலீசாரைக் கண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக பதிவெண் இல்லாத டியோ இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். போலீசார் வாகன சோதனை செய்வதை கண்டு இருசக்கர வாகனத்தை வேகமாக திருப்பி அருகில் இருந்த மாந்தோப்பில் வேகமாக செல்லும்போது அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து இரண்டு பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் அவர்களை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டதில் வியாசர்பாடி எம் எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கின்ற dio விக்னேஷ் என்பதும் தற்போது நடுகுத்தகை திருநின்றவூர் பகுதியில் வசித்து வருவதாகவும் அதேபோல் திருநின்றவூர் பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும் இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே செல்போன் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் மணவாள நகர் பகுதியில் தமிழரசி என்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வருவது  தெரிய வந்ததை அடுத்து இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீசாரின் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வாந்த இரண்டு கொள்ளையர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை வேகமாக ஓட்டி பள்ளத்தில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Copying is disabled on this page!