கனமழையால் சேறும் சகதியாக காணப்படும் ஈரோடு காய்கறி மார்க்கெட்.
ஈரோட்டில் புகழ்பெற்ற நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் தொடர் மழையின் காரணமாக மார்க்கெட் முழுவதும் சேரும் சகதிமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக கூறி வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வாட்டர் ஆபீஸ் சாலையில் புகழ்பெற்ற நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி பல ஆண்டுகளாக வருகிறது.
இங்கு அண்டை மாநிலமான கர்நாடகா,கேரளா, ஆந்திரா,போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருவது வழக்கம் இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டமானது தினமும் அதிகரித்தே காணப்பட்டு வரும், இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக மார்க்கெட் முழுவதும் சேரும் சகதியும் ஆக இருப்பதோடு மார்க்கெட் முழுவதும் குளம் போல் மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மழைக்காலத்தில் இதே சூழ்நிலை நீடிப்பதால் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தார் சாலை அமைத்து தரக் கோரி கூறியும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தண்ணீர் முழுவதும் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பு அபாயமும் இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தரக் கோரி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments