மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவிகள் மாநில அளவில் 3 வது இடம்.
மாநில அளவில் 38 மாவட்ட கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்ட கல்லூரி மாணவிகள் 3வது இடம் பெற்றுள்ளனர். அண்ணா யுனிவர்சிட்டி சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்ட கல்லூரி மாணவிகள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி மாநில அளவில் 3 வது இடத்தை வென்று பரிசு தொகை 3,75,000 ₹, சான்றிதழ் மற்றும் மெடல்கள் பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாநில அளவில் 3 வது இடம் பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
No comments