குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மஹிஷா சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்காரம் கோவில் கடற்கரையில் நள்ளிரவு நடைபெற உள்ளது. மாலை அணிவித்து விரதமிருந்து திருகாப்பு கட்டி காளி, அம்மன், சிவன், குரங்கு சுடலைமாடன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு வேடமனிந்த பக்தர்கள் குழுக்களாகவும், தனியாகவும் வீடு வீடாக சென்று பெற்ற காணிக்கையை இன்று கோவில் உண்டியலில் செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இன்று நள்ளிரவு மஹிசா சூரசம்காரம் நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .தற்போது பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ. முகேஷ் செல்: 7339011001
No comments