உளுந்தூர்பேட்டை அருகே காலையில் பெய்த மழையால் தெருக்களில் வெளியேற முடியாமல் மழை நீர் தேங்கியதால் கிராம மக்கள் கடும் அவதி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் என கிராம மக்களிடையே கேள்வி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராம ஊராட்சிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் கடும் அவதி பட்டு வருகின்றன 10ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலை இருந்து வருவதாகவும் கிராம மக்கள் நோய் தொற்றால் அதிக அளவு பாதிக்கப்படுவதாகவும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்த கிராம சாலையில் வசிக்கக்கூடிய கிராமவாசிகள் பெருமளவு அவதிப்பட்டு வருவதாகவும் மழை நேரங்களில் தொடர்ந்து இதே நிலை நீடிப்பதால் நோய்த்தொற்றுப் பரவும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர் இது மட்டுமில்லாமல் ஊராட்சி நிர்வாகத்திடமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய தண்ணீரை தெருக்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வேதனையோடு தெரிவித்தனர்...
இது சம்பந்தமாக அதிகாரிகள் செய்வதாக கூறி செல்வதோடு எதையும் செய்வதற்காக முன்வருவதில்லை என கிராம மக்கள் புலம்பி தள்ளினர்.
No comments