Breaking News

சீர்காழியில் வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு...

 



மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளாக சீர்காழியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி 

பார்வையிட்டு பேரிடர் மீட்பு கருவிகளை ஆய்வு செய்தார்கள்.தொடர்ந்து சீர்காழி வட்டாரம் காவிரிபூம்பட்டினம் ஊராட்சியில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


சீர்காழியில் தனியார் திருமண மண்டபத்தில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 37 வீரர்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு,பேரிடர் மீட்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து காவிரிபூம்பட்டினம் ஊராட்சியில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு,குடிநீர்,கழிவறை,மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது, 11 புயல் பாதுகாப்பு மையங்கள மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 362 திருமண மண்டபம் -146. சமுதாய கூடம்-58 ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 பகுதிகள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 33 குறைந்த அளவு பாதிக்கக்கூடிய பகுதிகள் என மொத்தம் 201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

     

  4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள். புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக அனைத்து துறைகளிலும் ஜெசிபி 85. ஜெனரேட்டர்கள் 164, பவர் சா 57, ஹிட்டாச்சி 31, ஆயில் என்ஜின்கள் மணல் மூட்டைகள் 40351, மரம் அறுக்கும் கருவிகள் -84, சவுக்கு கம்பங்கள்,34110 பிளிச்சிங் பவுடர் 5870 கிலோ ஆகியவன போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பாரமரிப்புக்குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்துத்துறை அலுவலர்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளார்கள். 


     தாழ்வான மின்கம்பங்கள் இழுத்து கட்டப்பட்டுள்ளது. மின் பாதையில் இடையூராக இருந்த மரங்கள் மற்றும் கிளைகள் 2320 அகற்றப்பட்டுள்ளது. 5600 மின்கம்பங்கள் இருப்பு உள்ளது. மின்மாற்றிகள் 44 மற்றும் 52 கி.மீ மின் கம்பிகளும் அவசர காலத்திற்கு பயன்படுத்திட கை இருப்பில் உள்ளது. வெள்ளம் மற்றும் மழையின் போது நாய் கடி மற்றும் பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வுனு தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (யுசுஏ) மற்றும் பாம்பு எதிர்ப்பு வி~ம் (யுளுஏ) இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வடகிழக்கு பருவமழை 2024- ஆம் ஆண்டுமழைபுயல்ஃவெள்ளம்ஃஇடி மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்; அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்- 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்- 04364-1077 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ள -9442626792 என்ற எண்ணிலும், மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறையினை பொருத்தவரை மயிலாடுதுறை கோட்டத்திற்கு-04364-252218, 9498482319 என்ற எண்ணிலும், சீர்காழி கோட்டத்திற்கு - 04364-279301,9445854006 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு அறையினை பொருத்தவரை மயிலாடுதுறை கோட்டத்திற்கு - 04364222277, 8668171501 என்ற எண்ணிலும், சீர்காழி கோட்டத்திற்கு -04364-276336, 9842382883 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்;.இவ்வாய்வின்போது சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் .சுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி, சீர்காழி நகராட்சி ஆணையர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!