மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துரையாடி ஊக்கவுரையாற்றினார்..
மாணவ, மாணவிகள் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். உயர்ந்த நோக்கில் செயல்பட்டால் வாழ்க்கையில் உயர்வை அடையலாம். பள்ளி பாடங்களை தொடர்ந்து கற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் உயரலாம். வினா-விடை கையேடுகளை பயன்படுத்தி கொண்டு பொது தேர்விற்கு தயாராக வேண்டும். பெரிய கனவு கண்டால் அதுவே வெற்றி கிடைக்கும். ஒரு செயலை செய்ய நினைக்கும் போது, உள் உணர்வு அந்த செயலை 100 சதவீதம் செய்வதற்கு ஊக்கமளிக்கும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு மற்றும் குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முதன்மையாக தினசரி செய்தித்தாள்களை வாசித்து பழக வேண்டும். செய்திகள் வாசிப்பதனால் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். எனவே, மாணவ, மாணவிகள் கற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பாடங்களில் எழும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை தரம் உயர கல்வி ஒன்றே இன்றியமையாதது என்பதை அறிந்து நன்கு கல்வி பயின்று பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் பெருமையை தேடி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வினா-விடை கையேடு உருவாக்கிய பாட வல்லுநர்கள் கருத்துகளை கேட்டறிந்தார் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் எதிர்கால கனவுகள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா மற்றும் மஞ்சுளா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments