தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக நடைபெறுகிறது: ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர்!.
தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துமாலை, ஆனந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்தும் மற்ற பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று வருகிறது என்றார்.
கூட்டத்தில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டி கடற்கரை சாலை அமைத்தல், ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி பின்புறம் முதல் கே.வி.கே.நகர் வரை சாலை அமைத்தல், கோரம்பள்ளம் ஊராட்சி பி.எஸ்.பி.திம்மராஜபுரம் ஊராட்சி பேரூரணி வடக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், முடிவைதானேந்தல் ஊராட்சி செல்வவிநாயகர் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தளவாய்புரம் ஊராட்சி மேலத்தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகிரி ஊராட்சி நேருகாலணி, பாக்கியலட்சுமி நகரில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், பொன்ராஜ்நகர் குறுக்குத்தெரு, மகேஸ்வரிநகர் பகுதியில் தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், ஓன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமர், சுதர்சன், தொம்மை சேவியர், ஜெயகணபதி, முத்துலட்சுமி, செல்வபார்வதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசுந்தரி, சாந்தி, பூர்ணமாலா மச்சோடா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கஈஸ்வரி, நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர். -9952860724
No comments