கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட பெட்டிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் தண்டவாளம் மற்றும் மின்சார ஒயர் மறு சீரமைப்பு பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகின்றன.
ரயில்வே ஊழியர்கள் பழைய தண்டவாள கம்பிகளையும், உடைந்த சிமெண்ட் போஸ்ட்களையும் அப்புறப்படுத்தி ஜல்லிக் கற்களை சீர்படுத்தி, சிமெண்ட் போஸ்ட்களை அடுக்கி, தண்டவாளங்களை மறு சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்சார ஒயர் பராமரிப்பு பிரிவு ஊழியர்களும் மின் ஒயர்களை மறு சீரமைக்கும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் தொடங்கியுள்ள சூழலில் மின்விளக்குகள் இங்கு அமைக்கப்பட்டு அந்த வெளிச்சத்தில் தற்போது மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிச்சம் குறைந்து மின் விளக்குகள் பொருத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தற்போது தண்டவாளம் மற்றும் மின்சார ஒயர்களை மறு சீரமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று இரவே சென்னை மார்க்கத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன.
No comments