காரைக்கால் ஆதிதிராவிட நலத்துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு பதிலாக துணை இயக்குனர் பதவி..
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் ஏற்கனவே உதவி இயக்குனர் பதவி உள்ள நிலையில் இதனை உயர்த்தி துணை இயக்குனர் பதவி நியமிக்க வலியுறுத்தியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற துணைத்திட்ட நிதியை முழுவதுமாக அம்மக்களின் மேம்பாட்டிற்கு செலவு செய்ய கோரியும் திருப்பட்டினம் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதி செயலாளர் விடுதலைக்கனல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் குழு மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன்.செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். காரைக்கால் காமராஜர் நிர்வாகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அமைந்துள்ள காமராஜர் நிர்வாக வளாகத்தை நோக்கி சென்றனர் அப்போது காவல்துறையினர் காமராஜர் நிர்வாக வளாகத்திற்கு முன்னதாக பேரிக்காடுகளை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலுவலகத்தில் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்தினார். இதனை அடுத்து ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அமைந்துள்ள காமராஜர் நிர்வாக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments