புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், தற்போது வரை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாதிப்பு உள்ளதாக சுகாதார துறை இயக்குனர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை சுகாதார துறை இயக்குனர் செவ்வேள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் செவ்வேள், புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், தற்போது வரை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாதிப்பு உள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி போதிய அளவில் உள்ளதாகவும், அவரச சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவர்களை திருப்பி அனுப்ப முடியாது எனவே அவர்களுக்கு தரையில் பாய் போட்டு படுக்க வைத்து சிகிச்சை அளிக்க படுகிறது. அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்க படும் மருத்துகள் தர மத்திய அரசின் தர சான்றிதழ் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கபடுகிறது. தரமற்ற மருந்துகள் ஏதும் அரசு மருத்துவனைகளில் வழங்கபடுவதில்லை என்றார்.
No comments