தூத்துக்குடியில் பனைத்தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!.
பனை நல வாரியத்தின் செயல்பாட்டினை துரிதப்படுத்தவும், பனைத்தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கவும் அரசு ஆவண செய்யவேண்டும், தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும், பனைமரம் ஏறும்போது விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும், பதநீர் இறக்கி விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய வேண்டும், கோவை வேளாண் கல்லூரி உருவாக்கியுள்ள நவீன பனைமரம் ஏறும் இயந்திரத்தை பனைத்தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வின்சென்ட், பொருளாளர் மில்லை தேவராஜ், அவைத்தலைவர் இருதயக்குமார், தமிழ்நாடு நாடார் பேரவை ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், நாம் தமிழர் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பா.ஜ,க. துணைத் தலைவர் தங்கம், ஒட்டப்பிடாரம் ஒன்றிய ஆன்மிக பிரிவு பிரபாகரன், பனங்காட்டு மக்கள் கழகு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை மாநில பொதுச் செயலாளர் அழகுமந்திரி, காமராஜர் லட்சிய பேரவை தலைவர் பிரசன்னகுமார், நாடாளும் செல்வின் நாடார் பேரவை குமார், குளத்தூர் அன்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments