Breaking News

நபிகள் நாயகம் குறித்து இழிவாகப் பேசியவர்களை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


நபிகள் நாயகம் குறித்து இழிவாகப் பேசி அவர்களை கண்டித்தும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பேர்ணாம்பட்டு நான்கு கம்பம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான முஜமில்  அஹமத் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சக்கரவர்த்தி இர்ஷாத் அஹ்மத் உவைஸ் ஹக்மத் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கர் செல்வகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்ட செயலாளர்  MD. ராக்கிப்  வரவேற்புரையும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G. சுரேஷ்குமார் மாநில பேச்சாளர் நாட்டாம்கார் அப்துல் அக்பர் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு ஊராட்சி குழுத் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் சமூக ஆர்வலர் ராஜேந்திர பிரசாத் அறிஞர் மன்சூர் துணை தலைவர் முனிசாமி மாவட்ட பொதுச்செயலாளர் பாரத் நவீன் குமார் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது அராபத் விஜய் பாபு மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன் மாவட்ட கலை பிரிவு தலைவர் காத்தவராயன் மற்றும் பள்ளிகொண்டா சிக்கந்தர் காட்பாடி ரவி நாகேஸ்வரன் ரையான் ரஜினிகாந்த் பழனிவேல் நசுருதீன் மஸ்தான் காலித் பயாஸ் ரஃபி ஜுபைர் தல்ஹா  சுபியான் கலீல் சுஜாத் சுகைல் அர்ஷத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹிர் நன்றி உரைக்கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். 

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!