ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பலகட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை இந்த நிலையில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பி. ஆர். டி. சி. தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அருள்மணி தலைமை தாங்க சங்க நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் என என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
No comments