வேலூர் புதிய நீதி கட்சி நெசவாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை.
கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் தறி நெய்து வரும் நெசவாளர்களுக்கான கூலி பட்டுவாடா இனிமேல் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது காசோலையாக கொடுத்தால் வாரத்தில் மூன்று நாட்கள் வங்கிகளுக்குச் சென்று மணி கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு 750 ரூபாய்க்கு கூலித்தொகை பெறுவதற்கு வேலை வருவாய் இழப்பு போக்குவரத்து செலவு ஏற்படும் ஆதலால் சில மணி நேரம் செலவிட்டு கூலி வாங்கி வருவது நெசவாளர்களுக்கு தற்போது கூலி வழங்கும் முறையே சரியானதாக இருக்கிறது.
மேலும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை கொடுக்கும் இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நெசவாளர்களுக்கான கூலி பட்டுவாடா வங்கி பரிவர்த்தனை மூலம் செய்வது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள மானியத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் புதிய நிதி கட்சியின் சார்பில் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ். ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments