பட்டாசு கடை நடத்த போலி ஆணை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை .
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான ஜவஹர் முதன்மை சாலையில் அமைந்துள்ள கடை எண் 21ல் பட்டாசு கடை நடத்துவதற்காக அக்கடையின் குத்தகைதாரர் சிவா என்பவருக்கு ஆணையரின் அனுமதி என்று தன்னைச்சையாக புஞ்சை புளியம்பட்டி நகராட்சி வருவாய் ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் வருவாய் உதவியாளர் யோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து போலியான கோப்பு எண் இட்டு தடையின்மை சான்று தயார் செய்து ஆணையாளர் இடத்தில் கையொப்பமிட்டு நகராட்சி முத்திரையை யாருடைய அனுமதியும் பெறாமல் அச்சிட்டு வழங்கி உள்ளனார்.
இவ்வாறு போலியாக ஆவணம் தயார் செய்து சட்டத்திற்கு புறமான நடவடிக்கையில் ஈடுபட்ட மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புஞ்சை புளியம்பட்டி நகர மன்ற தலைவர் ஜனார்த்தனன் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்
No comments