Breaking News

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து பாடலில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாளும்" என்ற வரி திட்டமிட்டு நீக்கம்..

 


 புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொலைக்காட்சி சார்பில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து பாடலில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாளும்" என்ற வரி திட்டமிட்டு நீக்கம் செய்து பாடியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் ஆளுநருக்கு வேண்டும் என்றே தர்ம சங்கடத்தை உண்டாக்க பாடப்பட்டதா, அல்லது ஆளுநர் பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டு செய்யபட்டதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் திமுக அரசுக்கு எப்போதெல்லாம் பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் ஆளுநர் அரசுக்கு சாதகமான ஒரு செயல் பாட்டில் ஈடுபட்டு அந்த பிரச்சனையை திசை திருப்ப முயற்சி செய்கிறார். தற்போது மழை குறித்த பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்ப இப்போது தமிழ்த்தாய் விவாகாரத்தை கையில் எடுத்து உள்ளனர். இது ஆளுநருக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள நாடகமாக தெரிகிறது.

1967ல் இந்தி திணிப்புக்காக பேரறிஞர் அண்ணா தூரத்தி அடிக்கப்பட்ட காங்கிரஸ் கூட கூட்டணி வைத்து கொண்டு இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவது திமுகவின் இரட்டை வேடம், இந்த இரட்டை வேடம் தொடர்ந்து நீடிக்காது, 

வரும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவர்கள், 

தமிழகத்தில் பிஜேபி யின் B டீமாக திமுக உள்ளது, தமிழகத்தில் எப்படி திமுக இரட்டை வேடம் போடுகிறதோ அதுபோல் புதுச்சேரியில் உள்ள அக்கட்சியை சேர்ந்த எதிக்கட்சி தலைவர் 4 வேடம் போடுகிறார், 

புதுச்சேரியில் போதை பொருள் விற்பனையால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக கூறுகிறார்,

மது மற்றும் போதை பொருட்களால் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என திமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது உண்மை என்றால் தான் நடத்தும் 10க்கும் மேற்பட்ட கடைகளை அரசிடம் ஒப்படைக்க தயாரா? 

40 மாத கால தமிழக திமுக ஆட்சியில் 20க்கு மேற்பட்ட கூற்றவாளிகள் என் கவுண்டர் செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஏன் அங்கு எங்கவுண்டர் நடைபெறுகிறது. மது, போதை,சட்டம் ஒழுங்கு இவற்றை பற்றி பேச திமுகவிற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை, 

புதுச்சேரியில் பிஜேபி சேர்ந்த சபாநாயகர் தொடர்ந்து மரபுகளையும் மாண்புகளையும் மீறி வருகிறார். கட்சி, RSS கூட்டத்தில் பங்கேர்க்கிறார், முதலமைச்சர் அறையில் தினசரி அமர்ந்து கொண்டு கோப்புகள் தொடர்பாக விளக்கம் கூற முதல்வரின் அறைக்கு வரும் அதிகாரிகளை தான் சபாநாயகர் என்பதை மறந்து சகட்டு மேனிக்கு கேள்வி கேட்டு வருகிறார். இவையெல்லாம் அதிகார துஷ்பிரயோகமாகும், இது போன்ற சபாநாயகரின் செயலை முதலமைச்சர் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்.

சபாநாயகர் பணி முதலமைச்சருக்கு தேவை என்றால் அவருக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்து தன்னுடன் வைத்து கொள்ளலாம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 

சட்டமன்றத்திற்கு வெளியே அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தன்னை அழைக்க வேண்டும் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று 

துணை நிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கடற்கரை மேலாண்மை மற்றும் பல்வேறு தொழில்கள் அதற்க்கான உலக வங்கி நிதிகள் சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் எப்படி அழைக்கப்பட்டார் எந்த சட்ட விதியின் கீழ் அழைக்கப்பட்டார் என அவரை அழைத்த அதிகாரிகளிடம் ஆளுநர் கேள்வி கேட்க வேண்டும். கடந்த காலங்களில் சபாநாயகர் சம்பந்தமான மரபுகளை மீறப்ட்டிருந்தாலும், மீண்டும் மரபுகளை 

மீறபடுவதை ஆளுநர் அனுமதிக்க கூடாது, முதலமைச்சர் எதிரிலேயே சபாநாயகருக்கும், சுயேட்ச்சை சட்டமன்ற உறுப்பினர் நேருக்கும் ஏற்பட்ட மொதலில் தகாத வார்த்தைகளும் கைகலப்பும் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவையெல்லாம் 

சட்டமன்றத்திற்கு அழகா? 

இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

பேட்டியின் போது மாநிலக் கழக இணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார்,மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி ,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தனர்.


No comments

Copying is disabled on this page!