பிரபல ஜவுளி கடை நிறுவனத்தில் நேற்று மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் மரணம்; மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் மனைவி புகார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திறப்பு இன்று விழாவிற்காக பிரபல ஜவுளிக்கடையில் இறுதிக்கட்ட பணியில் 100 மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக வேலை செய்தவந்த நிலையில் கல்லல் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் (வயது 44 )எலக்ட்ரீசியனாக இரவு பகலாக வேலை செய்த நிலையில் நேற்று இரவு ஜவுளி கடையின் கீழ் தளத்தில் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார் உடன் பணியில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த நிலையில் அவருடைய மனைவி சுதாராணி தனக்கு இரு குழந்தைகள் உள்ளதாகவும் தனது கணவர் மோகன் குமார் கடந்த 23.09.24 அன்று கடை நிர்வாகத்தால் எலக்ட்ரீசியன் ஆக தேர்வு செய்யப்பட்டு வீட்டுக்கு வராமல் இரவு பகலாக வேலை பார்த்து வந்ததாகவும் நேற்று இரவு தனது கணவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர் இரவு பகலாக வேலை பார்த்த கணவர் இறப்பு எப்படி நடந்தது என்று தெரியவில்லை அதனால் என்னுடைய கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது இறப்பில் தனக்கு சந்தேகம் உள்ளதாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .
No comments