Breaking News

குலசை தசரா விழாவில் பாதுகாப்பு சிறப்பாக செய்த திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜுவுக்கு டி.ஐ.ஜி பாராட்டு.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்தகோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா விழா புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் கடந்த சனிக்கிழமை குலசை கடற்கரையில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தசரா விழாவின் 10 நாட்களும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கடந்த ஆண்டை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தநிலையில் காவல்துறையினரின் அற்புதமான பணியை பாராட்டு திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜூக்கு திருநெல்வேலி சரக காவல்துறைத் துணைத்தலைவர் பா. மூர்த்தி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்வில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான்,கன்னியாகுமரி எஸ்பி சுந்தரவதனம்,தென்காசி எஸ்பி சீனிவாசன்,திருநெல்வேலி எஸ்பி சிதம்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ. முகேஷ் செல்: 7339011001 

No comments

Copying is disabled on this page!