Breaking News

சி.பி.ஐ., அதிகாரி போல பேசி 11.65 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

 



புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரை தொடர்பு கொண்டவர், சி.பி.ஐ., அதிகாரி என முதலில் அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய அந்த நபர், உங்கள் மகன் பாலியல் வழக்கு தொடர்பாக, மும்பை போலீஸ் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை செய்ய வேண்டும். இல்லை எனில் இந்த வழக்கில் இருந்து விடுக்க பணம் வேண்டும் என மிரட்டினார். அதற்கு பயந்து அவர், தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம், 11.65 லட்சம் ரூபாயை, அந்த நபருக்கு அனுப்பினார்.


அதனை தொடர்ந்து, முருகவேல், இது சமபந்தமாக விசாணை செய்த போது, அந்த நபர் போலியான சி.பி.ஐ., அதிகாரி என தெரியவந்தது. இதுகுறித்து, அவர் புதுச்சேரி சி.பி.ஐ., போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!